தமிழ கடவுள் முருகனை மலேசியவில் கண்டவர் ஒரு தமிழர்! பத்துமலை முருகன் கோவிலின் வரலாறு!




உலக புகழ்பெற்ற மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கோயில்களில் ஒன்றான பத்துமலைக் குகை முருகன் கோயிலின் வரலாற்றை தான் நாம் பார்க்கப்போகிறோம்.


பத்துமலைக் குகை முருகனை அங்கு சுப்ரமணியர் என்றே அழைக்கப்படுகிறார். உலகில் உள்ள முருகன் கோவில்களை விட மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலைக் குகை முருகன் கோவில் மிகவும் பிரசிப்பெற்றது.


வரலாறு:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு இரு குகைகள் இருந்துள்ளன. அந்த குகை மிகவும் ஆழமாகவும், இருட்டாகவும் உள்ளது. அதன் பக்கத்தில் இருந்த இன்னொரு குகையில்தான் முருகன் இருந்துள்ளார். இந்த குகையில்தான் முருகனின் வேல் இருந்ததுள்ளது. இதனை கண்ட தமிழ் பக்தரருக்கு அது முருகன் கடவுள் என்று அறிந்துள்ளார். அதன் பின்னர் தான் இந்த இடத்தில் முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்று வரலாறு கூறப்படுகிறது.


அதன் பின்னர் பல பரிணாம வளர்ச்சியினை அடுத்து முருகன் கோவில் மிகவும் பிரசிதிப்பெற்றது. தமிழர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைவரும் வந்து முருகனை தரிசித்து செல்கின்றார்கள். பல மக்கள் காவடிகள் ஏந்தியும், முதுகில் அலகு குத்தியும், பால் குடங்களை தலையில் சுமந்தும் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். சாதி, மதப்பாகுபாடு ஏதும் இன்றி இங்கு அனைவரும் கோவிலுக்கு வந்து செல்வது தனிச் சிறப்பாகும். 

Post a Comment

0 Comments