இரவு, பகல் பாராமல் உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாத அழுத்த சிகிச்சை கொடுக்கும் தன்னார்வலர்!


கொரோனா வைரஸ் தொற்றினால் இரவு, பகல் பாராமல்  உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கால் வலி, பாத எரிச்சல், மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனைப் போக்கும் நோக்கியில் இலவசமாகப் பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர்.


உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.


இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள்  என அனைவரும் தொடர்ந்து அவர்களுடைய பணியை  செய்து மக்களை காத்து வருகிறார்கள்.இவ்வாறி நமக்காக உதவும் துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் புதுச்சேரியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் ஒரு முயற்சியை மேற்கொண்டு உள்ளார். 


அது என்னவென்றால் இரவு பகல் பாராமல் தொடந்து உழைத்து கொண்டு இருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கால் வலி, பாத எரிச்சல், மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனைப் போக்கும் நோக்கில் இலவசமாகப் பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார்.

 

இந்த நபர் புதுச்சேரியில் பாத அழுத்த சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் பல  பேரிடர் கால சூழ்நிலையில் ஓய்வின்றி உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு , உதவும் வகையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இப்படி அவர்களுக்கு செய்வதனால் அவர்களுக்கு வலி நீங்கி, ரத்த ஓட்டம் சீராகும் மற்றும் முக்கியமாக  மன உளைச்சல் நீங்கி நிம்மதியாக உறக்கம் வரும் என்பதால் தான் இந்த  பாத அழுத்தச் சிகிச்சையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படி காசு பணம் உதவி மட்டுமின்றி இப்படி மனித நேயத்துடன் உதவும் உள்ளங்களை நாம் வாழ்த்தலாம்.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,



Post a Comment

0 Comments