சென்னையில் 18- தேதி முதல் 25 பணியக்ளுடன் பஸ்கள் இயங்க அனுமதி!


கொரோனாவின் தாக்கம் சென்னையில் அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், வரும் 18ம் தேதி முதல் 25 பயணிகளுடன் பேருந்துகள் இயங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


கொரோனாவின் உச்சம் அதிகரித்து கொண்டு இருகின்றது. ஒரு புறம் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழக அரசும் பல நிதி நெருக்கடியில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வருகிற 18-ந்தேதி முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.


 பேருந்தில் உள்ள  இருக்கைகளில் 20 பயணிகளை அமரச் செய்தும், 5 பயணிகளை நிற்பதற்கு அனுமதித்தும் ஆக மொத்தம் 25 பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கம் குறைய குறைய பேருந்துகளின் பயணிகளை அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.


அதே போல் மின்சார ரெயில்களில் ஒரு பெட்டிக்கு 50 பேர்களை அனுமதிக்கும் வகையில் ரயில்களை இயக்குவது என்றும், மெட்ரோ ரெயிலில் மொத்தம் 160 பயணிகளுடன் இயக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


பேருந்து ரெயில்  போன்ற போக்குவரத்து  பயணம்  என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். மக்களின்  இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பும் வகையில் பேருந்து, ரயில் போக்குவரத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


இது தொடர்பாக பல  முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக  ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.


 இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! 34 வகையான கடைகளை திறக்க அரசு அனுமதி!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! டீக்கடைகள், தனிக்கடைகள் திறக்க அனுமதி!













Post a Comment

0 Comments