தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! 34 வகையான கடைகளை திறக்க அரசு அனுமதி!



தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நாளைமுதல் 34 வகையான கடைகளை திறக்க  அரசு அனுமதி அளித்துள்ளது.  மேலும் அவற்றின் முழுவிவரங்களையும் வெளியிட்டுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு  ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு தளர்வுகளில் குறிப்பிட்டுள்ள கடைகள் என்ன என்பதை பற்றி கணலாம்.


1.டீக்கடைகள் (பார்சல் மட்டும்)

2. பேக்கரிகள் (பார்சல் மட்டும்)

3. உணவகங்கள் (பார்சல் மட்டும்)

4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

5. கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்

6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்

7. மின்சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

8. மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

9. கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

10. வீட்டு உபயோக இயந்திரங்கள் (House Hold Appliances) மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்

11. மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்

12. கண் காண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்

13. சிறிய நகைக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)

14. சிறிய ஜவுளிக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) - ஊரக பகுதிகளில் மட்டும்

15. மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்

16. டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்

17. பெட்டி கடைகள்

18. பர்னிச்சர் கடைகள்

19. சாலையோர தள்ளுவண்டி கடைகள்

20. உலர் சலவையகங்கள்

21. கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

22. லாரி புக்கிங் சர்வீஸ்

23. ஜெராக்ஸ் கடைகள்

24. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்

25. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்

26. நாட்டு மருந்து விற்பனை கடைகள்

27. விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்

28. டைல்ஸ் கடைகள்

29. பெயிண்ட் கடைகள்

30. எலக்ட்ரிகல் கடைகள்

31. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்

32. நர்சரி கார்டன்கள்

33. மரக்கடைகள் மற்றம் பிளைவுட் கடைகள்

34. மரம் அறுக்கும் கடைகள்


 இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! டீக்கடைகள், தனிக்கடைகள் திறக்க அனுமதி!












Post a Comment

0 Comments