வெறும் தரையில் படுப்பதினால் நமது ரத்தம் உறிஞ்சப்படுமா?



நம்ம ஊரு பக்கத்துல எல்லாம் வெறும் சிமெண்ட் தரையில் படுக்காதிங்க ரத்தத்தை உறிஞ்சிவிடும் அப்படினு சொல்லுவாங்க அது எல்லாம் உண்மையா அப்படி-னு கேட்ட அது உண்மை இல்லைங்க.



எப்படி அப்படி சொல்லுற அப்படி-னு கேட்கிறீங்களா, வாங்க அந்த அறிவியலை அறிவோம் நாம! பொதுவாக சிமெண்ட் தயாரிப்பில் 70% சுண்ணாம்புக்கல் , 22%சிலிக்கா , 5% அலுமினா பவுடர் , 3 % ஃபெரிக் ஆக்ஸைடு ஆகியவை கலக்கி நன்றாக தூளாக்கி , சலித்து , கலந்து , உலையிலிட்டு , அதிக வெப்பநிலைக்கு உயர்த்தி , பின்னர் குளிரவைத்து , பொடி செய்து , சலித்து கிடைப்பதுதான் சிமெண்ட்.



இப்படி தயாரிக்கப்பட்ட சிமெண்ட் தூளில் அதிக அளவு இருப்பது சுண்ணாம்பு தாங்க, இதனால கட்டட வேலை செய்பவர்களின் கை , தோல் செல்கள் சிதைவு அடைய வாய்ப்புண்டு. அவ்வளவே தானே தவிர! சிமெண்ட் தரையில் படுத்தால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் அப்படி-னு சொல்லுறது எல்லாம் உண்மையல்ல இப்பவாது தெரிஞ்சிக்குங்க அறிவியலை! 



மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,







இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?






Post a Comment

0 Comments