இது எல்லாம் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரில் கண்டிபாக கல் உருவாகும்!




சிறுநீரகக் கற்கள் என்பது இப்போது அதிகமாகி வரும் ஒரு நோன்றே கூறலாம். இந்த சிறுநீரகக் கற்கள் பொதுவாக கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேறாமலும் இருப்பதன் மூலம் அதிக அளவு சிறுநீரகக் கற்கள் உருவாகின்றது என கூறப்பட்டுகின்றது. சிறுநீரகக் கற்கள் என்பது ஆண், பெண் என்ற வேறுபாடுகளின்றி அனைத்து வயதினருக்கும் வரகூடிய பிரச்னையாக உள்ளது.



சிறுநீரகக் கற்கள் உருவாவது என்பது ஓரிரு நாட்களில் வருபவை கிடையாது. சுமாரக ஒரு வருட காலத்தில் சிறுநீரகத்தில் சிறுகச்சிறுக சேர்ந்துதான் கற்களாக உருவாகின்றன. பொதுவாக 20-50 –வயதுக்கு உட்பட்டவருக்கு சிறுநீரகக் கற்கள் பிரச்னை வருவது வழக்கம் ஆரம்பக்கட்டத்தில் பெரும்பாலும் வலி இருக்காது.



கீழ் முதுகுப்பகுதியில் இருந்து வலி ஆரம்பிக்கும். கற்கள் கொஞ்சம் பெரிதான பிறகுதான் முழு வலி ஆரம்பிக்கும். கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக நாம் அனைவரும் சாப்பிடும் சில உணவுகள் மூலம் கூட ஏற்படுகின்றது என சொல்லப்படுகின்றது. தற்போது எந்தெந்த உணவுகள் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.



சிறுநீர் கற்கள் உருவாக காரணங்கள்:


அதிக புரதம் உள்ளது சிவப்பு இறைச்சியில் அதிகமாக யூரிக் அமிலம் இருப்பதால் அதில் இருந்து சிறுநீரக கற்களை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சோடாக்கள் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை உட்கொள்வதால் சிறுநீரக கற்களை உருவாக்கிறது.


வெள்ளை அரிசி, சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்கின்றன, இத்தகைய உணவுகளை உட்கொண்டால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் அவை சிறுநீரக கற்கள் உருவாகத் தூண்டும். அதிக அளவு காஃபின் உட்கொள்வது சிறுநீரகத்தில் கால்சியம் சுரக்கப்படுவதை அதிகரிக்கிறது, இது சிறுநீரக கற்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.


கீரைகள், ருபார்ப், பாதாம், முந்திரி, கோகோ பவுடர், வெண்டைக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றில் அதிகளவு ஆக்சலேட் உள்ளது. இந்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடுவது மிகவும் சிறுநீரகத்திற்கு நல்லது.


செயற்கை இனிப்புகள் வழக்கமாக உட்கொள்வது சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்., செயற்கை இனிப்பு பானங்களை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்து அதிகமாகும்.

ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வது சிறுநீரகங்களையும் கல்லீரலையும் சேதப்படுத்தும். இது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது, இது சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்து சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உப்பில் அதிகளவு சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோயை எழுப்புகிறது.

மேலும்இது போன்ற  தகவலை காண,
















Post a Comment

0 Comments