20 லட்சம் கோடி - என்னென்ன திட்டங்கள்?



பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் என்று தெரிவித்தார். இந்நிலையில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் . தொழில் நடத்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது திட்டத்தின் நோக்கம். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் - பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள் போன்ற ஐந்து தூண்களை உருவாக்குவதற்காக இந்த ஆத்ம நிர்பர் பாரத் கொண்டு வரப்பட்டுள்ளது

ஆத்ம நிர்பர் பாரத் - தமிழில் "சுயசார்பு பாரதம்" ஆகும் 

பல துறை அமைச்சர்கள் & அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனையின் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நெருக்கடிகளில்தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறோம். இந்தியா சுயநலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

தன்னிறைவு இந்தியா:

தன்னிறைவு இந்தியா என்பது உலகத்திடம் இருந்து துண்டித்துக் கொள்வது அல்ல , தன்னம்பிக்கையை மேலும் அதிகரிப்பது தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நோக்கம். உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும்- நிர்மலா சீதாராமன் மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அரசு.

  • ரூ.100 கோடி வரை வியாபாரம் உள்ள சிறு, குறு தொழில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி கடன் இருந்தால் அவர்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்.
  • 4 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முதல் ஒரு ஆண்டு தவணை செலுத்த வேண்டியதில்லை.
  • கடன் பெறுவதற்கு சொத்துப் பத்திரங்கள், மற்றும் பிணை ஏதும் தேவையில்லை.
  • பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் துறைக்கு ரூ.20,000 கோடி கடன் வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும்.
  • வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடன்.
  • குறு தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு
  • குறு தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்வு
  • நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு
  • ரூ.200 கோடிக்கும் குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது
சர்வதேச டெண்டர் கட்டுப்பாட்டால் இந்திய நிறுவனங்கள் பயன்பெறும்.சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய அனைத்து தொகைகளும் 45 நாட்களில் வழங்கப்படும்.ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பி.எஃப் சந்தாவை அரசே செலுத்தும். இதனால் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். அடுத்த காலாண்டில் பி.எஃப் தொகையை நிறுவனங்கள், தொழிலாளர்கள் 10 சதவீதம் செலுத்தினால் போதும்.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,






Post a Comment

0 Comments