நாம் உண்ணும் உணவில் ஏன் முதலில் இனிப்பு சேர்க்கப்படுகின்றது?

உணவே மருந்து


உணவே மருந்து நம் முன்னோர்களின் வாக்கு. காரணம் நமது உணவு பழக்கங்கள் அப்படி. நாம் உணவு உண்ணுவதே ஒரு கலையுடன் தான் செய்வோம். என்னென்றால் அது நமது பாரம்பரியம். அப்படி என்ன சொல்கிறது நமது பாரம்பரியம் என்று பார்க்கலாம் வாங்க.

முதலில் ஏன் இனிப்பு வைக்கிறார்கள் தெரியுமா?

நாம் வாழையிலையில் உண்பது நமது பாரம்பரியம். அதனால் தான் எந்தவொரு விஷே வீட்டிலும் வாழையிலை போட்டு பரிமாறுவது உண்டு. வாழையிலை உணவு என்றால் அது ஒரு தனி மரியாதை தான். அப்படி பட்ட விருந்தில் ஏன் முதலில் இனிப்பு வழங்குகிறார்கள் என்று தெரியுமா?

நமது உடலில் உமிழ்நீர் சுரப்பதால்தான், உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் உணவில் முதலில் இனிப்பு வைக்கப்படுகின்றது. உணவை அரைத்துச் சாப்பிடுவதன் நன்று காரணம் உமிழ் நீருக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும்.

இதற்கு தான் நம் முன்னோர்கள் ஒரு பழமொழி ஒன்றை கூறியுள்ளார்கள்.நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று கூறினர். உணவின் இறுதியில், மோர் சாப்பிடுவது நல்லது. ஜீரணம் நடைபெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக்கூடிய அல்சருக்கு, மோர் பானமே மருந்தாக இருக்கும் என்பதற்காக தான்.

எந்த வரிசையில் உண்வை சாப்பிட வேண்டும்:

முதலில் இனிப்பு சப்பிட்ட பிறகு சாம்பார், வத்தல் குழம்பு அப்படி என்று உண்ண வேண்டும். கடைசியில் ரசம், மோர் என்ற வரிசையில், உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.

நமது முன்னோர்களின் அறிவியல் சற்று வித்தியாசமானது. ஆனால் அர்த்தமும் உண்டு அறிவியலும் உண்டு. இனிமேல் உணவு உண்ணும் போது எப்படி உண்ண வேண்டும் என்பதை அறிந்து கொண்டு உண்ணுங்கள் மற்றும் பிறருக்கும் அதனை கற்று கொடுங்கள். உணவே மருந்து என்ற நமது பாரம்பரியத்தை வளர்ப்போம். வாழ்க வளமுடன்! 

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,
















Post a Comment

0 Comments