10 ரூபாய் காசு எங்க ஊரில செல்லாது!! உண்மையில் 10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதா? தவியாய் தவிக்கும் பொதுமக்கள்!!



சென்னையை தவிர தமிழ் நாட்டில் பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை எடுத்து சென்றால் எங்க ஊரில் இது செல்லாது வெறு காசு கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கொள்ளுகிறார்கள். உண்மையில் 10 ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாத என்பதை பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என கூறி வியாபாரிகள், பஸ் நடத்துனர்கள், பெட்ரோல் பங்க்குகள் என பலரும் வாங்க மறுப்பதால் பொது மக்கள் பரிதவிக்கின்றனர்.  ஆனால் உண்மையில் தமிழ் நாட்டின் மாற்ற மாவட்டங்களிலும் இதே நிலமை தான்.இதனை ஒழுங்குப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.



கடந்த 2016 ல் மத்திய அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது. இதனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கு மாற்றாக புதிய ரூ. 2000 நோட்டுகள் ,ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

 பண புழக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான ரூ.10, ரூ.20, ரூ.50,ரூ.100,ரூ.200 நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சிலர் 10 ரூபாய் காசுகள் செல்லாது என தவறான வதந்தியை பரப்பினர்.

அந்த தவறான வதந்தியால் வியாபாரிகள் ,பேருந்து நடத்துனர்கள் என பலரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அரசு , வங்கி அதிகாரிகள் அனைத்து வகையான 10 ரூபாய் காசுகள் செல்லும் என தெரிவித்து வந்தனர்.

 

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பொருட்கள் வாங்கும் போதும், பேருந்து பயணங்களின் போதும் நாணயத்தை வாங்க மறுருப்பதால் வாக்குவாதம் நடப்பது தொடர்கிறது. 10 ரூபாய் காசு குறித்த தவறான வதந்தியாலும், அறியாமையாலும் பொதுமக்கள் பலர் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

பத்து ரூபாய் நாணயம் செல்லாது என தவறான வதந்தியை சிலர் பரப்பியதன் விளைவாகவும், தவறான புரிதலாலும் பெரும்பாலானோர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.

இதனால் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் இப்பிரச்னை உள்ளது. இதுபோன்ற வதந்தியை பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயம் குறித்து வியாபாரிகள், நடத்துனர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தயக்கம் இன்றி பயன்படுத்தலாம் என வங்கிகள், மாவட்ட நிர்வாகம் எடுத்து கூற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்த பிரச்சணைக்கு தீர்வு கிடைக்கும்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!

இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!

Post a Comment

0 Comments