அரசமரத்திற்கும் பிள்ளையாருக்கும் என்ன சம்பந்தம்?




        ரசமரத்தில் தான் புத்தருக்கு ஞானம் பிறந்தது என்பதை அனைவரும் அறிந்தது. ஆனால், அரச மரம் என்றால் பிள்ளையார் தான் இருப்பார் என்பது இந்தியாவில் இருக்கும் ஒரு நன்நம்பிக்கை. அதேமாதரி இந்தியாவில் எங்கு சென்றாலும் விதிக்கு ஒரு அரசமரத்து பிள்ளையார் கண்டிபாக இருப்பார். எல்லாம் சரி அரசமரத்திற்கும்  பிள்ளையாருக்கும் என்ன சம்பந்தம் அப்படி என்று கேட்பவரா நீங்கள் வருங்கள் உங்களுக்கான விளைக்கத்தை கொடுக்கிறேன்.

அரசமரம்:


அரசமரம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுவோம் முதலில். அரசு என்பது பெரியதாக வளரக்கூடிய மரம் என்ற பொருளாகும். ஆல்,அரசி, அத்தி இது போன்ற தொடர்புடைய மரங்கள் ஆகும். 30 மீட்டர் வளரக்கூடிய இந்த மரம் இந்தியா, இலங்கை, சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் நன்கு வளரக்கூடியது. சீனாவில் மட்டும் தென்மேற்கு சீனா பகுதிகளில் அரசமரம் இருக்கும். புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரமும் அரசமரம் தாங்க.இதில் குறிப்பிடத்தக்க விஷியம் என்னவென்றால், நமது நாட்டில் வழங்கும் உயரிய விருதானபாரத ரத்னாபட்டத்தில் இலையைக் கொண்டுள்ளது.

 அரசமரத்திற்கும்  பிள்ளையாருக்கும் என்ன சம்பந்தம்:



அரசமரம்  பொருளாதார ரீதியிலோ பார்த்தால்  மக்களுக்கு பெரிய பயன் ஒன்றும் கிடையாது,  ஆனால் அரசமரம் இந்துக்களால் வழிபடப்படும் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது.  அதற்கு காரணம் அறிவியல் தான் நமது முன்னோர்கள் செய்த அறிவியல் தந்தரம் தான் இதுவும்.  அப்படி என்று கேட்கிறீர்களா, அரசமரம் மனிதர்களின் உயிர்க்காற்றான ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடுவதே இதற்குக் காரணம்


 பொதுவாக இரவு நேரங்களில் மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியீடுவது வழக்கம் ஆனால் அரசமரம் அதற்கு மாறாக இரவு நேரத்திலும் கூட ஆக்சிஜனை வெளியீடுங்கின்றன. இதனை அறிந்த நம் முன்னோர்கள்  பெரும்பாலும் பிள்ளையார் உருவங்களை  அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள்.


 அரசமரம் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியீடுவதினால், காலை வழிபாடு விநாயகர் வழிபாடு என்று கூறி அனைவரையும் வழிபாட கூறியுள்ளனர். அதன் காரணமாக மக்கள் அனைவரும் அரசமரத்தை சுற்றி வருவதும், தொப்புக்கரணம் போடும் பழக்கமும் உருவாயிற்று. இது தான் அரசமரத்திற்கும்  பிள்ளையாருக்கும் உள்ள சம்பந்தம்.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,



மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,












Post a Comment

1 Comments

aroon said…
Good.. nalla pannuga madam