உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்; இயந்திரமயமான உலகில் நொடிக்கு நொடி திக் திக் நிமிடங்கள்!



இயந்திரமயமான நாம் வசிக்கும் இப்புவி நொடிக்கு நொடி மணிக்கு மணி, நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தினால் தூரத்திலுள்ள ஓசோன் படலத்திலும் ஓட்டைகள் பல விழுந்த வண்ணம் உள்ளது. இப்படி பட்ட சூழலில் மனித பூச்சுகள் மண்ணில் வாழ்வது நொடிக்கு நொடி திக் திக் நிமிடங்களாகவே கழிக்கின்றனர்.

 

இந்திய வானிலை ஆய்வுத்துறை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2009ஆம் ஆண்டு கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தது.மேலும்,2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு வருட வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இவ்வாறு வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகில் 200 கோடி பேர் வெள்ளத்தால் சூழப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தால் சூழப்பட்டால் கடற்கரை நகரங்கள் அனைத்தும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விட்டது.

 

பருவநிலை மாற்றம்:

 




பருவநிலை மாற்றம் என்பது பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ். ஆனால் அது கடந்த காலங்களில் குறைவாகவும், அதிகமாகவும் இருந்து வந்துள்ளது.இவ்வாறு பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பருவநிலை மாற்றத்தின் முக்கிய காரணம்:

 

பருவநிலை மாற்றத்தின் காரணம் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையை பருவநிலை மாற்றத்தின் முக்கிய பங்காக அமைகின்றது.

 

பவருநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்:

 

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மிக முக்கியமான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 


·         புயல் வானிநிலை (சூறாவளி, வெள்ளம், பலத்த புயல் காற்று மற்றும் புயல் காற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு)

·         வறட்சி, பசி மற்றும் நோய் பரப்பு போன்றவை அதிகரித்தல், குறிப்பாக ஏழை நாடுகளில் இவை பரவ கூடும்.

·         கார் காலம் மாறுபாடு அடையும் பொழுது, ஏரி மற்றம் குளங்களில் நீரின் அளவு குறைந்து காணப்படுவதால் நீர் நில வழிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்படும்.

·         கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப் பாறையில் சேதம் ஏற்பட கூடும்.

·         ஒசோனின் தட்ப வெப்பநிலை அதிகரிக்கும்.

·         கடல் சார் நோய்கள் ஏற்படும்.

·         பொருளாதார மற்றும் சமூக மந்தம் ஏற்படும்.

 

ஓசோன்:




ஒசோன் படலம் என்பது நமது வளிமண்டலத்தில் பாதுகாப்பு படலமாகும். இந்த ஓசோனின் மூலக்கூறு வாய்ப்பாடு (O3) இது மூன்று ஆக்ஸிஜன் அணு ஆகும்.ஓசோன் புவி நிலப்பரப்பிலிருந்து 19-30கி.மீ இடைதொலைவில் அமைந்துள்ளது. இந்தபடலமானது சூரியனிலிருந்து வரும் புறஊதாகதிர்களை தடுக்கிறது. சொல்லப் போனால் ஓசோன் பூமிக்கு ஒரு கவசமாக செயல்படுகின்றது.

 இந்த ஒசோன் படலம் இல்லாமல் இருந்தால் புற்றுநோயின் தாக்கம் பூவியில் அதிகமாகயிருக்கும். இந்த உலகில் ஒருவரும் உயிர் வாழமுடியாதநிலை ஏற்படும். இந்த படலத்தில் நிலைப்பாடு 10ppm ஆகும். இந்த ஒசோன் படலமானது சூரியஒளியை ஆக்ஸிஜனாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அளவானது இருப்பிலிருக்கும் நைட்ரஜன் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது.

 

இன்றைய காலகட்டத்தில் ஒசோன் படலத்தில் தளர்வு காணப்படுகிறது.  அதிலும், 1970ல் கண்டறியப்பட்ட குளோரோஃபுளோரோ கார்பன் ஒசோன் படலத்தை தாக்குகிறது. இந்த குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) குளிர்சாதனப்பெட்டி குளிர்விப்பான் மற்றும் காற்றில் மிதக்கும் தின்ம துகள்கள் தெளிப்பான் போன்றவற்றில் இருக்கிறது.

 

மனிதர்கள் இந்த  வகை சாதனங்களை அதிகமாக பயன்படுத்தும்போது புவியின் ஒசோன் படலத்தில் தளர்வு  ஏற்படுகிறது. எனினும் தற்போது வரும் பொருட்களில் CFC ஆனது இருப்பதில்லை. மேலும் இது மட்டுமல்லாமல், மற்ற பொருட்களான புரோமைன் ஹேலோகார்பன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் போன்றவையும் தாக்குகிறது.


விளைவுகள்:





·         அதிக அளவில் புறஊதாகதிர்கள் புவியை வந்தடைதல். (இதனால் புவி சமையல் அடுப்பினை போல் இருக்கும்)

·         அதிக வெப்பத்தால் உலக வெப்பமயமாக்கலின் அபாயம் அதிகரிக்கிறது

·         மூலக்கூறில் ஒரு புளோரைன் அணு ஒரு கார்பன் அணு மற்றும் 3 குளோரின் அணுக்கள் உள்ளது. இது புறஊதா கதிரால் தாக்கப்படுகிறது.

·         இதில் ஒரு குளோரின் அணு உடைந்து ஒசோனை (O3) தாக்குகிறது. ஒரு ஆக்ஸிஜன் அணு வெளியேறி குளோரின் மோனாக்ஸைடை உருவாகிறது. இந்த குளோரின் மோனாக்ஸைடு ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறினை வெளியேற்றுகிறது.

 

அமிலமழை:

 

அமிலமழை என்பது மற்ற மழையை போல அல்லாமல் அதிக அளவு அமிலத்தன்மையுடைய ஒரு வகை மழையாகும். மழைநீரானது சிறிதளவு அமிலத்தன்மையையும் 5 மற்றும் 6 காரஅமிலநிலையையும் கொண்டுயிருக்கும். நீரானது வளிமண்டலத்தில் ஆவியாகி கார்பன்டைஆக்ஸைடு உடன் கலந்து ஒரு வாரத்தில் அமிலமாகமாறிகிறது. அமில மழையானது அதிக கார அமிலநிலையை கொண்டது.

 காற்று மாசுபடுத்திகளான சல்பர்டைஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் போன்றவற்றின் தாக்கத்தினால் இது உருவாகிறது. இந்த சல்பர்டைஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு நீருடன் கலந்து அமிலத்தை தருகின்றது.

 

அமிலமழையின் தாக்கம்:

 

·         பெருங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் அரிப்பு

·         மண் மற்றும் ஏரிகளில் அமிலம் படிதல்

·         சுற்றுவட்ட நிலப்பரப்பில் உள்ள நச்சு கலந்த தாதுக்களான அலுமினியம் மற்றும் பாதரசம் போன்றவற்றை பிரித்தெடுத்தல், ஏரிகள் நீர் நிறைந்த பகுதிகளில் தொற்றுகளானது அதிகமாக இருத்தல்

·         மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிதல்

 

உலகம் வெப்பமயமாதல்:

உலக வெப்பமயமாதல் என்பது பசுமைகுடிலின் வாயு மற்றும் இதன் வளிமண்டலத்தின் ஆயுட்காலம் போன்ற மூலக்கூறின் வினைத்திறனை பொருத்துள்ளது.  வெப்பமயமாதலை கார்பன் டைஆக்ஸைடின் தொகுப்பினை பொறுத்து GWP-ன் தன்மை அளவீடு செய்யப்பட்டு, தனிப்பட்ட நேர அளவு மூலம் மதிப்பிடப்படுகின்றது.

20 வருட கால அளவில் அதாவது குறுகிய கால அளவில் மூலக்கூறானது அதிக யைகொண்டு இருக்கும். ஆனால் 100 வருட கால அளவில் குறைவாகவே இருக்கும். மாறாக மூலக்கூறானது, கார்பன்டைஆக்ஸைடை விட நீண்ட வளிமண்டல ஆயுட்காலம் கொண்டிருக்கும் போது இதன் GWP ஆனது குறித்த நேரத்தில் அதிகரிக்கும்.

 

பசுமைக்குடில் வாயுக்கள்  என்றால் என்ன?

சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

இங்கும் நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளது. இங்கு நான் இருக்கக்கூடாது கடல் கடந்து உள்ள என் பள்ளியில் நான் படித்து கொண்டு  இருக்க வேண்டும். ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை.  இளைஞர்களை நம்பி வருங்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். எவ்வளவு தைரியம்?  உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளையும், எனது குழந்தைப் பருவத்தை களவாடி விட்டீர்களே!”

 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த 74வது .நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒரு பகுதியாக பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு நடந்தது. அதில் டிரம்ப்,  மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 16 வயதேயான கிரேட்டா என்ற சிறுமி 5 நிமிடம் கொண்ட தனது உணர்ச்சிகர உரையாரல் உலக மக்களை தன்பால் ஈர்த்து உள்ளார்.

யார் இந்த கிரேட்டா:

 

 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி தான் கிரேட்டா. இவர் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வரும் வெள்ளிக்கிழமை வகுப்பை புறக்கணித்து விட்டு ”FRIDAY FOR FUTURE” என பருவநிலை வேலை நிறுத்தம் என்ற கோஷத்துடன் ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன்பாக போராட்டம் நடத்தி வருகிறார்.  இப்போராட்டம்  பல நாடுகளும் பரவி வருகின்றன.

 

விமான பயணம் ஒரு அவமானம்:

 

விண்ணில் பறக்கும் ஒவ்வொரு விமானமும் காற்று மண்டலத்தை சிதைத்து வருகிறது. என்னும் சிந்தனை மூலம் பத்து வருடங்களுக்கு முன்பு விமான பயணத்தை தவிர்த்து ஸ்வீடன் பெண்மணி மஜாரோஸன். தனது முடிவை உலகத்துக்குத் தெரிவிக்க  மஜாWE Stay on The Groundஎன்னும் பெயரில் ஒரு குரூப்புக்கு வடிவம் கொடுத்தார்.

 

 கடந்த 2017இல் ஸ்வீடன் விளையாட்டு வீரர் ஜான், ஃப்பெரி, கிரேட்டாவின் தாய் மலீனா ஆகியோர் காற்று மண்டலத்தை மாசுபடுத்தும்விமான பயணம் ஒரு அவமானம் என்னும் பெயரில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்தார்.  இந்த பிரச்சாரத்தில் கிரேட்டாவும் கலந்து கொண்டார். இந்த இரண்டு  ஹாஷ்டாக்மூலம் நடந்த  பிரசாரத்தில் 201ஆம் ஆண்டில் ஸ்வீடனில் இரயிலில் பயணம் செய்பவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

 

ஸ்வீடன் காலநிலை அமைப்பான  “We Don’t Want Time “ என்னும் சமூக ஊடக நிறுவனத்தை உருவாக்கி இன்மகர்  ரெஸோகன்  என்பவர்  பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பதிவுகளை பகிர்ந்து வருகின்றார்.

 

சூற்றுச்சூலை பாதிக்கும் எந்தவொரு வாகனமும் நமக்கு அவமானம் தான்:

ஸ்வீடன் போன்ற பல நாடுகளில் காற்று மாசு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வுடன் தங்களது பயணத்திற்கு ஏற்ப வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நம் இந்தியாவில் தற்போது தான் எலக்ட்ரிக் வாகங்கள் அறிமுகம் ஆகிகொண்டு இருகின்றது. இந்த சூழ்நிலையில், நாம் அனைவரும் வரும்காலத்திற்கு மாற வேண்டிய நெருக்கடில் தான் உள்ளோம் கால தாமதமின்றி நாம் அன்றாட பயன்படுத்தும் பெட்ரோல் வாகங்களை தவிர்த்து எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தினால் காற்று மாசில் இருந்து முழுமையாக நாம் விடுப்படலாம். பருவநிலை மாற்றமும் படிப்படியாக குறையும்.



இது போன்ற கவிதைகளை படிக்க!

குறிஞ்சியின் காலை பொழுது!!

மூன்றாம் பிறையுடன் ஒரு சின்ன காதல்!!








Post a Comment

0 Comments