திருமணத்திற்கு ஏன்? 10 பொருத்தம் பார்க்கிறார்கள் தெரியுமா? பலரும் அறிந்திடாத உண்மை இதோ!!


திருமணம் என்றால் மகிழிச்சி இரண்டு குடும்பங்கள் ஒன்றாகும் நிகழ்வு. இதில் மணப்பெண் மற்றும் மணமகனுக்கு பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்வார்கள். அப்படி செய்தால் தான் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பெரியவர்களின் நம்பிக்கை. இந்துகளில் நனம்பிக்கையும் கூடஅப்படி ஜோதிடத்தின் பார்வையில் திருமணத்திற்கு பெரியவர்கள் பார்க்கும் பொருத்தங்கள் என்ன என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

திருமணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அப்படி முன்னோர்கள் திருமணத்தை மதத்தோடும், தங்கள் கலாச்சாரத்தோடும் தொடர்புப்படுத்திப் போற்றுவது தான் இங்கு முக்கியக் காரணமாக அமைகிறது. பேச்சுக்கள் அடிபட்டு கொண்டே தான் இருக்கும்.

மணமக்களுக்கு எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது  என்பது மிகவும் முக்கியமானது. அதில் பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதிலும் பத்து பொருத்தமும், பொருந்தியிருந்தால் பாதி திருமணம் முடிந்த மாதிரி தான் என்று கூறுவார்கள். அது என்ன 10 பொருத்தம் என்று தானே கேட்கிறீர்கள். இதோ அந்த பத்து பொருத்தம் என்னவென்று பார்க்கலாம்.

பத்து பொருத்தங்கள் என்றால் என்ன?

தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், வசியப்பொருத்தம், ரஜ்ஜூ அல்லது ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகியவை தான்.

கணப்பொருத்தம்;

வரப்போகும் துணையின் குணங்களை பற்றி தெரிந்து வைத்து கொள்ள கூடிய பொருத்தமாகும். மேலும், கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் செட் ஆகுமா என்பதை பற்றி தெரிந்து வைத்து கொள்ள பார்க்கப்படுகிறது.

மகேந்திரப் பொருத்தம்;

திருமண வாழ்க்கையின் குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவது தான் மகேந்திரப் பொருத்தம் . இந்த பொருத்தம் இருந்ததால் தான் குலம் விருத்தி அடையும் புத்திர பாக்கியம் கிட்டும்.

தினப்பொருத்தம்;

இந்த பொருத்தம் மிக முக்கியமானதாக கருதப்படும், மணமக்களின் ஆரோக்கியம் , ஆயுளை குறிப்பிடுவதற்காக பார்க்கப்படுகின்றது. இதே போல வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் கஷ்ட நஷ்டங்களை கடந்து ஒற்றுமையாக நடத்த தினப்பொருத்தம் ஆகும்.

யோனிப்பொருத்தம்;

திருமணத்திற்கு பின்னர் மணமக்களின் உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். இருவருக்கும் இதில் முரண்பாடு ஏற்படாமல் இருக்க யோனி பொருத்தம் பார்க்கப்படுகின்றது. கணவன் மனைவி இருவருக்கும் உடல் உறவில் இருக்கும் ஈர்ப்பு, அன்பு ஆகியவை குறித்து அறிவது யோனிப் பொருத்தம்.

குடும்ப ஒற்றுமையாக இருக்க ராசி பொருத்தம்;

குடும்ப ஒற்றுமைக்காகவும், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும்.

ஸ்திரீ தீர்க்கம்;

மணமகளின் தீர்க்க சுமங்கலியாக வாழ பார்க்கப்படுவது ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. இது  திருமணம் செய்வதன் முக்கிய அம்சமாகும்.  மேலும், தனம்  தான்யம் விருத்திக்கு ஸ்திரி தீர்க்கப்பொருத்தம் இருக்க வேண்டும்

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,




Post a Comment

0 Comments