சித்த மருத்துவத்தில் சுவாச பிரச்சனை தீர்க்கும் முருங்கை



கொரோனா வைரஸ் ஒரு சுவாச பிரச்சனை நோய் என்று தான் கூறப்படுகின்றது. அதனால் நாம் சுவாசம் பிரச்சணையில் இருந்து தப்பிக்க சித்த மருதுவத்தை பயன்படுத்தலாம். வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. முருங்கைக்கீரை கைக்கட்டு குச்சிகளுடன் சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொண்டு
  2. இலவங்கப்பட்டை ஒரு துண்டு
  3. சீரகம் ஒரு 1 தேக்கரண்டி
  4. மல்லிவிதை ½ தேக்கரண்டி
  5. தண்ணீர் 1லிட்டர்

செய்முறை:

இவற்றை சேர்த்து அடுப்பிலேற்றி பாதியாக வற்ற காய்ச்சி வடித்து நாள்தோறும் காலை மாலை இருவேளையும் மிதமான சூட்டில் பருகிவர சுவாச பாதிப்புகள் அனைத்தும் விரைவில் நீங்கிடும்.

தூதுவேளை நெய் சாறம்:

கோழைக்கட்டு(சளி) அதிகமாயிருப்பின் தூதுவேளை நெய் சாறம் பயன்படுத்தினால் நிறைவான பலன்கிடைக்கும்.

தூதுவேளை கீரை கைப்பிடியளவு சுத்தம்செய்து நீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்து சமளவு நெய்சேர்த்து சிறுதீயில் 2-3 நிமிடம் காய்ச்சி. சுத்தமான வெள்ளை துணியில் வடித்து பிழிந்து சாறெடுத்து இரவில் பருகியதும் படுத்துக்கொண்டால் எப்படிப்பட்ட கோழைக்கட்டும் ஓரிருநாளில் கட்டுப்பட்டுவிடும்.

பகிலிலும் இதேபோல் செய்து பருகியதும் 10-15 நிமிடம் படுத்திருந்தால் போதுமானதாகும். இதனை அருந்தியவுடன் நீர் பருக கூடாது. நீர் தேவையெனில் முன்னமே பருகிடுங்கள். துணியில் வடித்த விழுதினை அப்படியே சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்த்து சாப்பிடலாம்படுக்க செல்லும்பொழுது பிழிந்து பிரித்து வைத்துள்ள சாறமதை பருகினால் போதும்..

தூதுவேளை நெய் சாறம்:

ஒருநாளைக்கு காலை மாலை இரவு என 2-3 வேளைகள் என 3நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் மிக விரைவில் நல்ல பலன் கிடைக்கும். அதன்பிறகு நாள்தோறும் இரவில் மட்டும் ஒருமாதம் எடுத்துக்கொண்டால் சுவாசமண்டலத்தில் எப்படிப்பட்ட பாதிப்பு இருப்பினும் தீர்ந்துபோகும் மேற்சொன்ன முறைகளை கடைபிடித்து நிறைபலனடைந்திடுங்கள்.

மேலும் இது போன்ற தகவல்களை காண,







Post a Comment

0 Comments