தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்? நாளைய அறிவிப்பு என்ன?


கொரோனாவின் தாக்கத்தினால் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில்,  தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்த வேளையில், நாளை அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் தமிழக அரசு நாளை அறிவிக்கலாம் என்று எதிர்பாக்கப்படுகின்றது.


தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருகின்றது. இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் சென்னை தவிர ஒரு சில மாவட்டங்கள் பச்சை மண்டமாக மாறி வருகின்றது. இதற்கிடையில், 3முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதினால் மக்களின் பொருளாதரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை மனதில் கொண்டு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை தகர்த்தி வருகின்றது.


இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் 4ம் கட்ட ஊரடங்கு பற்றிய  புதிய விதிமுறைகளுடன் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும், என்று தெரிவித்தார். அந்த அறிவிப்பை பற்றி மோடி அவர்கள் இந்த ஊரடங்கு தேவையா என்பது பற்றிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அளிக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டு வருகிறார்.

 

 அந்த அறிவிப்புகளை  இன்றைக்குள் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பெற்ற பிறகே, 4ம் கட்ட ஊரடங்குக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அது வெளியிட உள்ளது மத்திய அரசு.

 

இதற்கிடையில், தமிழகத்தில் 17-ந்தேதிக்கு பிறகு பேருந்துகளை இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.



பேருந்துகள் இயக்கப்படுவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் முதலில் குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 3-ல் ஒரு பகுதி பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை அல்லது மறுநாள் முதல் ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வுகளை குறித்து தமிழக அரசு  தனது அறிவிப்புகளை வெளியீடலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.

 இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ; இ-பாஸ் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!








Post a Comment

0 Comments