டாஸ்மாக் தொடர்பாக வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு!



ஊரடங்கில் டாஸ்மாக் கடைக்களுக்கு தடை விதித்த உயிர் நீதிமன்றத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிட்டில் இன்று நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்ததுள்ளது. இந்த செய்தியினை மது பிரியர்கள் மகிழ்ச்சி உடன் கொண்டாடி வருகிறார்கள். மேலும்,மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு!

 

 

கடந்த 7ஆம் தேதி  அன்று தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு மிகவும் லாபம் பெற்றது. இந்நிலையில், இதனை எதிர்த்து தொடரப்பட்ட  பொது நல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது

 

இதனையடுத்து, தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கை தொடர்ந்தது. அந்த வழக்கில் இன்று விசாரணைக்கு எடுத்தது அதில் நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.கே. கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. தமிழக சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்

 

இதையடுத்து நீதிபதிகள்  சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளனர்.  இந்த செய்து மது பிரியர்களுக்கு ஒரு குட் நீயூஸ்-யாக அமைந்துள்ளது.

 


இந்நிலையில், தமிழகம் முழுவதும் 3,700 டாஸ்மாக் கடைகளில் சீல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. துவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்

.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,














Post a Comment

0 Comments