மின்னல் தாக்கியதால் இசை ஞானம் பெற்ற 54 வயதுடைய டாக்டர்! நம்ப முடிகிறதா? உண்மையில் நடந்து என்ன?


அமெரிக்காவில் எலும்பு சிகிச்சை டாக்டர் ஒருவருக்கு மின்னல் தாக்க, அவருக்கு திடீரென இசை ஞானம் வந்து இருப்பது மிகவும் அதிசியமாக உள்ளது. இது உண்மையில் நடந்த சம்பவமா வாங்க பார்க்கலாம் இதன் உண்மை தன்மை குறித்து.


அமெரிக்க நியூயார்க் பகுதியை சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணரர் தான் Tony Cicoria என்பவர். இவர் ஒரு நாள் நியூயார்க்கில் பொது தொலைபேசி ஒன்றை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது, Tony Cicoriaவை மின்னல் தாக்கி உள்ளது. ஆனால் பெரும் ஆபத்து இல்லை, ஆனால் அவரது உடல் வழியே மின்சாரம் பாய்ந்ததை அவர் உணர்ந்துள்ளார்.


இதனையடுத்து, வழக்கம் போல் வீட்டிற்கு சென்று இரவு தூங்கியுள்ளார். இந்நிலையில், அந்த கணத்திலிருந்தே Cicoriaவுக்கு இசை மீது  ஒரு அபார ஈர்ப்பு உருவாகியிருக்கிறது.  அவர் தூக்கத்தில் இருந்தால் கனவு ஒன்றைக் கண்டிருக்கிறார். அந்த கனவில் Tony Cicoria,  தானே உருவாக்கிய தனது சொந்த இசையை பியானோவில் இசைப்பதுபோல் கனவு கண்டு உள்ளார்.


இதனையடுத்து, வழக்கம் போல் தனது அவர் எழுந்து தனது வேலைகளை செய்து கொண்டு இருந்தார். ஆனால் அவருக்கு தன் கனவில் கேட்ட இசை மட்டும் அவரது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இவர் எலும்பு சிகிச்சை நிபுணரர் என்பதால் இசை பற்றி  எந்த அறிவுமே இல்லாத இவர்க்கு திடீரென இசையின் மீது ஒரு ஆர்வம் வந்துள்ளது. இதனையடுத்து அவரும் இசை கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார், அப்போது அவருக்கு வயது 40.

 

இப்படி இசைக்கற்று கொண்டு இருந்த அவர், சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு தனது  கனவில் கேட்ட அந்த இசையினை சொந்த இசையாக உருவாக்கியிருக்கிறார் அவர். இவரது கதை பிரபலமாக, நியூயார்க் மாகாண பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர்களில் ஒருவர் Cicoriaவை தங்கள் கலையரங்கத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த அழைப்புயும் விடுத்துள்ளார்.


கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம்,  Cicoriaவை மின்னல் தாக்கி 14 ஆண்டுகள் ஆன பின், ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவர் நடத்திய இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். ஆனால் எப்படி கனவில் கேட்ட இசையை நான் வாசித்தேன் என்பது எனக்கும் இன்றும் மர்மாகத்தான் உள்ளது என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,













Post a Comment

0 Comments