ரூ.20 லட்சம் கோடி - 3ம் கட்ட அறிவிப்பு


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 20 லட்சம் கோடியில் மூன்றாம் கட்ட அறிவிப்பில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.


விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும். 8 அறிவிப்புகள் வேளாண் உள்கட்டமைப்புக்கானதாக இருக்கும். வேளாண்துறை சார்ந்த 11 நிவாரண திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு. வேளாண்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 74,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

· பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது.

· சணல், பருப்பு உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது

· கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது

· வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 74,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு

· ரூ.18,700 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது

· ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.74,300 கோடிக்கு உணவுப்பொருள் கொள்முதல்

· குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.

· 5.60 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

· வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு; ரூ.1 லட்சம் கோடி நிதி உடனடியாக வங்களில் செலுத்தப்படும்.

· அறுவடைக்கு பிந்தையை வேளாண் தேவைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி பயன்படுத்தப்படும்

· வேளாண் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

· மார்ச் மாதத்துடன் அங்கீகாரத்தை இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி -மத்திய நிதி அமைச்சகம்

· இறால் இறக்குமதிக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

· ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.18,700 கோடி நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.18,700 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.74,300 கோடிக்கு உணவுப்பொருள் கொள்முதல். குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. பயிர்காப்பீடு திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ரூ.6400 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாய கடன்களுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.5,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.ரூ.1 லட்சம் கோடி நிதி உடனடியாக வங்கிகளில் செலுத்தப்படும்.


ஊரடங்கு காலத்தில் பாலின் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.18,700 கோடி நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழில் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு போன்றவை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொடர் நிலையங்கள் போன்றவற்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

















Post a Comment

0 Comments