கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!

               

இங்கிலாந்து அமைந்துள்ள  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை  உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.

 

உலகமெங்கும் கொரோனா தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை நீடித்து வரும் சூழ்நிலையில், உலகமெங்கும் தடுப்பூசிக்காக ஆராய்ச்சிகள் மட்டும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக  இங்கிலாந்தில் அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மிகப்பெரிய தடுப்பூசி கண்டுபிடிக்கும் திட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்தி வருகின்றது.


இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை முதலில் குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்துள்ளனர். அதில் கொரோனா வைரசை தடுப்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளன.  மேலும், அத்துடன் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை நாங்கள் கண்டு பிடித்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும் என்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட குரங்குகளின் மூச்சுக்குழாய் அழற்சி திரவம் மற்றும் சுவாசக்குழாய் திசுக்களில் கொரோனா வைரஸ் குறைந்ததைக் காண முடிந்தது, மேலும் நிமோனியாவும் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமா? என்பதை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி ஆராய்ந்திருப்பது, மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதித்து வருகிற தடுப்பூசி பரிசோதனைக்கு துணையாக அமைந்துள்ளது மருந்து மருத்துவ பேராசிரியர் டாக்டர் பென்னி வார்ட் குறிப்பிட்டார்.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்துத்துறை பேராசிரியர் ஜான் பெல் கூறும்போது, “தடுப்பூசி செலுத்தப்படுகிறவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்ற சமிக்ஞைக்காக காத்து இருக்கிறோம்என்று குறிப்பிட்டார்.  கொரோனா தடுப்பூசி சோதனை இங்கிலாந்தில் வெற்றி பெறுகிறபோது, மதிப்பீடு செய்வதற்கு அடுத்த கட்டமாக கென்யா மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளையும், அந்த நாட்டு அரசையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நாடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.



கொரோனா  தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிக்க உலகின் பிற நாடுகளும் தயாராக இருக்கும்      வேளையில் தற்போது இதனை நாங்கள்  உறுதிப்படுத்த விரும்புகிறோம். வளரும் நாடுகளில் தேவை அதிகமாக இருக்கும் என இதனை சிக்கரமாக தயாரிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார். இதனை மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்க்கப்படுகிற சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இது போன்ற சுவாரசியமான தகவலை காண,










Post a Comment

0 Comments