கொரோனாவிற்கு 8 தடுப்பூசிகள் பரிசோதனையில்; உலக சுகாதார நிறுவனம் தகவல்


உலகையை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ்க்கு பல நாடுகள் தடுப்பூசிகள் தயாரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தற்போது உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவை தடுக்கும் வகையில் 8 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் சோதனையில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மிகவும்  தீவிரமாக உள்ளனர். இதனையடுத்து பல நாடுகள் தடுப்பூசி கண்டு பிடித்துவிட்டதாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால் இது அனைத்திற்கும் மௌனம் சாதித்து வந்த உலக சுகாதார மையம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

 

உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பது:

 

கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் வேளையில், பல நாடுகள் தங்களின் அனைத்து ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றது. அதில் 2021-ம் ஆண்டு மார்ச்  முதல் ஜூன் மாதத்திற்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவோம் என சீனா தெரிவித்துள்ளது. அதற்கு மேல் அமெரிக்கா, இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிடுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

உலகளவில் 46 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,11,425 பேர் உயிரிழந்துள்ளனர்இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும் ஒன்று இணைந்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர். அதில் தற்போது  8 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

  இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!

சிறப்பு திவால் சட்டம் - அனைத்து துறைகளும் தனியார் மயம் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்? நாளைய அறிவிப்பு என்ன?

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ; இ-பாஸ் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!







Post a Comment

0 Comments