சிறப்பு திவால் சட்டம் - அனைத்து துறைகளும் தனியார் மயம் நிர்மலா சீதாராமன்


செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அவர்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்யும் வகையில்  அனைத்து நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கடந்த நான்கு நாட்களாக பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் குறித்து  பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்று நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், 100 நாள் வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உள்பட 7 அறிவிப்புகளை  தற்போது வெளியிட்டு உள்ளார்.

 

அதில், குறிப்பாக 1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டி.வி. சேனல். கல்வித்துறைக்காக 12 புதியச் சேனல்கள். மே 30-ந்தேதி முதல் ஆன்லைன் பாடங்களை தொடங்குவதற்கு 100 பல்கலைக்கழங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்யும் வகையில் நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

அவர் அறிக்கையில், திவாலாகும் நடவடிக்கை ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்படும் என்றும் 7 விதிமீறல்களுக்கான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன என்றும், ஐந்து விதிமீறல்கள் நடவடிக்கையில் மாற்றம். சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை நிறுவனக்கொள்கையில் காலத்திற்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்யப்படும். உத்திச்சார்ந்த துறையைத் தவிர மற்ற அனைத்து துறைகளும் தனியார்மயமாகின்றன திடீர் அறிவிப்பை அறிவித்துள்ளார்.

 இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்? நாளைய அறிவிப்பு என்ன?

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ; இ-பாஸ் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!








Post a Comment

0 Comments