செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்! படம் எடுத்த இஸ்ரோ, நாசாவின் விஞ்ஞானிகள்


செவ்வாய் கிரகத்தில் அங்கே பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை இஸ்ரோ, நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கொண்உ இருக்கும் வேளையில், எலன் மஸ்க் உட்பட பெரும் பணக்காரர்கள் செவ்வாயில் குடியேறு வதைப் பற்றி அடிக்கடி டுவிட்டிக் கொண்டிருக் கிறார்கள். இதற்கிடையில் செவ்வாய் கிரகத்தில் அங்கே பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை இஸ்ரோ, நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

நாசா செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பி வைத்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், நாசா செவ்வாயைச் சுற்றி வரும் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களை வைத்து ஒரு வரைபடத்தையும் உருவாக்கியிருக்கிறது.


இவ்வாறு செவ்வாயின் மேற்பரப்பில் எங்கே தண்ணீர் இருக்கின்றது என்பதை துல்லியமாகக் காட்டுகிறது அந்த வரைப்படம்.  அந்த ஆராய்ச்சியில், செவ்வாயில் 2.5 செ.மீ ஆழத்திலேயே தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.  இதில் முக்கிய விஷியம் என்னவென்றால் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு  மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப நாசா  திட்டமிட்டு வருகிறது.

 

அமெரிக்கா தான் நிலாவில் முதலில் கால் அடிவைத்தது உலகம் அறிந்தது. இந்நிலையில், பல தொழில் நுட்பங்கள் இருக்கும் இந்த 21-ம் நூற்றாண்டில் செவ்வாயில் முதலில் கால் வைக்கும் நாடாக அமெரிக்கா கண்டிபாக இருக்கும் என்பதையும் தண்ணீர் உள்ள பகுதிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,








இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?


Post a Comment

0 Comments