அட!! இதன் மீசையில் இவ்வளவு சூட்சுமம் இருக்கிறதா? இவ்வளவு நாள் இது தெரியமால் போச்சே!!


பொதுவாக பனி பிரதேசத்தில் வாழும் சீல்களின் மீசைகள் சற்று பெரிதாக இருக்கும். பார்பதற்கும் சற்று அழகாக இருக்க கூடும். ஆனால் இதன் மீசையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றது என்று தற்போது ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது.

 

இந்த பனி பிரதேச விலங்கினமான சீல், இன்னும் பல புதிர்களை வைத்திருக்கிறது. அதுவும் சீல்களால் எப்படி இருட்டிலும் இரையை துல்லியமாகப் பிடிக்க முடிகிறது? என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தற்போது பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

 

அந்த ஆராய்ச்சியில் ,சில சீல்களின் மூக்கிற்கு அருகே கேமிராக்களையும், அகச்சிவப்புக் எல்..,டிக்களையும் பொருத்தி தகவல்களை சேகரித்து கண்டு அறிந்துள்ளனர்.

 

அதில் சீல்கள் தங்கள் மீசைகளை சற்றே நீட்டித்து அசைக்கின்றன. இதன் மூலம் மீசை முடிகள், நீரின் அதிர்வுகளை உள்வாங்குகின்றன.

 பிறகு அருகே மீன்கள் நீந்தினால், அந்த அதிர்வுகளை  கொண்டு ஆன்டெனா போல சீல் மீசை முடிகள் உணர்த்துகின்றன. உடனே சீல்கள் பாய்ந்து  தனது உணவை உண்கிறது.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,













Post a Comment

0 Comments