இது மட்டும் தெரிந்தால்! வெங்காய தோலை கீழே போடவிடமாட்டீர்கள்!! என்ன ஒரு அற்புதம்!!


அல்லியம் சீபம் என்று அறிவியல் பெயர் கொண்ட வெங்காயத்தை தமிழ் நாட்டில் அன்றாட உணவில் சேர்த்து கொண்டு வருகிறோம். வெங்காயத்தில் பல நன்மைகள் இருந்தாலும், உங்களுக்கு தெரியாத அதன் தோலின் ரகசியம் என்னவென்று தெரியுமா?  நாம் குப்பையில் தூக்கி போடும் வெங்காய தோல்களில் உள்ள சத்துகள்  பற்றி உங்களுக்கு தெரிந்தால் அதனை விடமாட்டீர்கள்.    

வெங்காய தோலில் உள்ள பயன்கள்:

வெங்காய தோலில் உள்ள சத்துகளை  முழுமையாக பெறுவதற்கு  சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ, குடிக்கலாம்.  

அதற்கு, முதலில் வெ ங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து 15 நிமிடம் கழித்து  அந்நீரை வடிகட்டி தேன் கலந்து தினமும்  இரவில் படுக்கும் முன்னர் ஒருகப் குடிக்கலாம்.

நன்மைகள் :    

  • வெங்காயத்தின், தோலில் உள்ள ஆற்றல் மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில், அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

  • வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட்புற்று நோய்கான பண்புகள் - பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் இதில் இருக்கிறது.
  • வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறு துணையாக இருந்து குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

  • அதுமட்டுமின்றி வெங்காய தோலானது உடல் பருமன் குடல் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இனிமேல்    யாரும் வெங்காய தோலை விடமாட்டீகள் அல்லவா!!

மேலும்இது போன்ற  தகவலை காண,

தூக்கமின்மை தான் பல நோய்களுக்கான அறிகுறி!! எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம்.!!

















Post a Comment

0 Comments