உங்கள் குடலை சுத்தம் பண்ணணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!


இப்போ இருக்கின்ற இளைஞர்களுக்கு உணவு உண்ண கூட நேரம் இல்லமால் போயிற்று. அதனலயே, கிடைக்கும் உணவை கண்ட கண்ட இடங்களில் உண்ணுகிறார்கள். சுத்தம் இல்லாத சத்து இல்லாத உணவை உட்கொள்ளுவதால் உடல் எடை என்ற பிரச்சணை இப்போது எல்லாம் அதிகமாகி கொண்டு இருகின்றது.


நாம் உண்ணும் உணவு அனைத்தையும் தரம் பிரிக்கும் முக்கியமா வேலையை கூடியது குடல் தானங்க. அவ்வளவு வேலை செய்கின்ற குடலை நாம் எவ்வளவு சுத்தமா வைச்சுகணும் அல்லவா. அப்படி வைச்சுகலனா என்ன நடக்கும் அப்படி-னு கேட்கிறிங்களா? குடலை நாம் சுத்தமாக வைத்து கொள்ளாவிட்டால் அது மலச்சிக்கலில் கொண்டு போயிதான் விட்டுடும். சரி அப்படி மலச்சிக்கலில் இருந்து தப்பிக்க நாம் குடலை எப்படி வைச்சக்கனும் வாங்க பார்க்கலாம்.

 

மனிதனின் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதில் நீர் ஒரு  மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தினமும்  காலையில் 8-10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதுவும் எழுந்ததும் ஒரு கிளாஸ் சூடான நீர் குடிப்பதால் வயிற்றில் கழிவுகளை எளிதாக வெளியேற்றும்.  சூடான நீரில் கொஞ்சம் தேன், லெமன் சேர்த்து கொண்டால் மெட்டாபாலிசத்தை அதிகரித்து குடல் நச்சுக்களை அனைத்தும் வெளியேற்றும்.


 நீரின் மூலமாக உடலையும், உள்ளுறுப்புகளையும் சுத்தம் செய்யும் முறை மிகவும் சிறந்தது மனிதன் தினமும் 1 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை கூட நீர் பருகலாம்.

அன்றாடமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும். காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடித்தால் உடலுக்கும், குடலுக்கும் மிகவும் நன்மையாகும்.

லெமன் ஜூஸ், உப்பு அல்லது தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து காலையில் குடித்தால் மலச்சிக்கல் குணமடையும். லெமனில் விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே இருக்கின்றது.

கூனைப்பூக்கள், ராஸ்பெர்ரி, போர்கள், ஆப்பிள்கள்,  பட்டாணி, ப்ரோக்கோலி, முதலியன. தானியங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் விதைகள் போன்ற நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது குடலை எளிதாக சுத்தம் செய்து குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

பீட்ரூட், தக்காளி, கீரை, கேரட், வெள்ளரி, முட்டைக்கோசு, ப்ரோக்கோலி, வோக்கோசு போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை அனைத்தும் குடலில் உள்ள கழிவுகள் நீங்கி எடையை குறைக்க உதவும்.

                           

கற்றாழை இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை எடுத்து அதனுடன் லெமன் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை குடித்து வந்தால் கண்டிபாக மலச்சிக்கல் குணமாகும். சரும ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் இரைப்பைக் வலி அனைத்தும் போக்கும் வல்லமை கற்றாழைக்கு உண்டு.

இஞ்சி சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகும்.

ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து தினமும் காலை, இரவு என  உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் 2 தடவை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகி புற்றுநோய் வராமல் தடுக்கும்.

குடலை சுத்தம் செய்ய திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி நீரில் கலந்து குடித்து வர குடல் பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும்.

கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை சுத்தமாக்கும். ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெது வெதுப்பாக குடித்து  வந்தால் வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகளும் கரைந்து விடும்.

ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் குடல் சுத்தமாகும்.



குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் ஸ்பூன் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து குடித்து வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.

நார்ச்சத்துகள்  நிறைந்த அவகேடா வெண்ணெய் பழம் தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.

லீக்ஸ், பட்டாணி, கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது குடல் நன்றாக சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளதை ட்ரை பண்ணுங்க உங்கள் குடல் மிகவும் சுத்தமாக இருக்கும். எளிதில் எடை குறைக்கும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் கூட இதனை ட்ரை பண்ணலாம். குடலில் உள்ள கேட்ட கலோரிகளை கரைத்து விட்டலே பாதி எடை குறைந்து விடும். அதனால் நம் முன்னோர்கள் கூறுவது போல் உணவே மருந்து என்ற வார்த்தையை பின்பற்றினால் மிகவும் நன்று.

மேலும்இது போன்ற  தகவலை காண,















Post a Comment

0 Comments