பச்சை மிளகாயை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா? இனிமே பச்சையை மிளகாயை விட மாட்டீர்கள்!!

நம்மில் பலர் பச்சை மிளகாய் என்றலே தெறித்து ஓடுவார்கள். ஆனால் அந்த பச்சை மிளகாயில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று தெரியுமா. தெரிந்தால் இனிமேல் விடமாட்டீர்கள்.

குறிப்பாக பச்சை மிளகாயில் வைட்டமின் , வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற  பல ஊட்டச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளனஅதனால் நமது வாழ்கை முறையில் தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டால் நமது உடலுக்கு நன்மையே.

பொதுவாக மற்ற காய்கறிகளை  விட பச்சை மிளகாயில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

  இதில் இருக்கும்  மெட்டபாலிசம் என்னும் செயல்முறையில் உணவுகளானது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகின்றன.  இதானல் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன.



 பச்சை மிளகாயில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. இதனால் இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும், ரத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்க உதவுகிறது.  பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.


குறிப்பாக பச்சை மிளகாய் சளி, ஜலதோஷத்திற்கு காரணமான தொற்றுக்களை அழிக்க உதவி, நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

பச்சை மிளகாயை ஒரு டப்பாவில் போட்டு மூடி, குளிர்ச்சியான இடத்தில் வைத்தால், அதில் உள்ள வைட்டமின் சி நீடித்திருக்கும். இல்லை என்றால், வெளிக்காற்று, சூடான மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால்  அதில் இருக்கும் வைட்டமின் சி குறைந்து விடும்

குறிப்பாக சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.

மேலும்இது போன்ற  தகவலை காண,


























Post a Comment

0 Comments