வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் காத்து இருக்கும் பேராபத்து? அதுவும் குறிப்பாக மனிதர்களுக்கு காத்து இருக்கும் அதிர்ச்சி!!!

மனிதர்களுக்கு செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு தொடர்பு உண்டு குறிப்பாக ஆதி காலம் முதல் இப்போது வரையும் பிரிக்க முடியாத ஒரு உறவு உண்டு. அப்படி மனிதர்களின் வாழ்கையில் அங்கமாக இருக்கும் செல்ல பிராணிகளால் பல நன்மைகள் இருந்தாலும் தற்போது பேராபத்து ஒன்று இருக்கிறது.  

குறிப்பாக மனிதர்கள் வளர்க்கும் பறவைகளில் தான் இந்த பேராபத்து ஒளிந்துள்ளது. குறிப்பாக மனிதர்கள் செய்யும் தவறுகளில் ஒன்றாக பறவைகளை முத்தமிடுதல், முகத்திற்கு அருகில் வைத்து கொஞ்சுதல் கூடாது. வீட்டில் செல்ல பறவைகளை வளர்க்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். செல்ல பறவைகளின் வயிற்றில் சால்மோனெல்லா என்னும் நுண்ணுயிரிகள் இருக்கின்றது.

பறவைகளின் எச்சத்தை தவறுதலாக மனிதன் உண்ணும் போதோ, உணவில், குடிநீரில் கலக்கும் போதோ டைபாய்டு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது

இதனால் மனிதர்களில் குறிப்பாக குழந்தைகளுக்கு பேதி, உடல் வெப்பம் அதிகரிப்பது, வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும். கிளமைடோபைலா சிட்டாஸி நுண்ணுயிரியால் உண்டாகும் சுட்டகோஸிஸ் என்னும் நோய், கிளி, மக்காவ்(Macaw), காக்கடைல்(Cockatiel) போன்ற பறவைகள் மூலம் பரவும்.

பறவைகளின் உலர்ந்த எச்சமானது, காற்றிலுள்ள தூசியில் கலந்து மனிதனுக்கு பரவுகிறது.  இப்படி உடல் வெப்பம், தலைவலி, உடல் வலி மற்றும் வறண்டு இருமல் ஏற்படும் செல்ல பறவை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பறவைகளின் கூண்டு, உணவு பாத்திரம் மற்றும் எச்சத்தை கையாளும் போது கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.

கூண்டுகளை காற்றோட்டமுள்ள இடங்களில் வைக்க வேண்டும். புகை மிகுந்த மற்றும் உருவாகக்கூடிய சமையலறையில் வைக்கக்கூடாது. பறவைகளுக்கு தேவையான உணவு மற்றும் நீரை அளிக்க வேண்டும். கூண்டில் உள்ள எச்சம் மற்றும் உண்ணாமல் விட்ட உணவுகளை நீண்ட நேரம் அப்படியே வைக்காமல் உடனுக்குடன் அகற்றுதல் மிகவும் அவசியம் ஒன்றாகும்.


மேலும்இது போன்ற  தகவலை காண,





















Post a Comment

0 Comments