நாம் அலட்சியமாக நினைக்கும் நாவல்பழத்தில் எவ்வளவு வியக்க வைக்கும் பலன்கள் இருக்கின்றது தெரியுமா? இனிமே தேடிபோயி சாப்பிடுவீர்கள்!!


நாக்கில் எச்சில் உறும் பழங்களில் ஒன்று தான் நாவல்
பழம். இது மிகவும்வித்தியசமான சுவைகளை கொண்டது. கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் புளிப்பு மற்றும் அதிக துவர்ப்பும் நிறைந்த பழம் தான் இந்த நாவல் பழம்.

இதன் விதை, இலை, பழம் என அனைத்துமே உடல் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக இந்த பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, மற்றும் பி, நார்ச்சத்து, புரதச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.

குறிப்பாக உங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டிகளுக்கு மிகவும் பிடித்த பேவரைட் பழங்களில் ஒன்றாக நாவல்பழம் கட்டாயம் இருக்கும். அப்படி பட்ட நாவல் பழத்தின் சில நன்மைகளை இதோ இனி பார்க்கலாம்...!!

 

நம்ம இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நாவல்பழம்:

 

 

நாவல் பழத்தை அளவாக சாப்பிடும் போது நமது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது இரத்தத் தமனிகளை ஆரோக்கியமாக வைக்கிறது. பெருந்தமனி தடிப்பு, இதயம் தொடர்பான பிரச்சனைகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பை மெதுவாக குறைக்கிறது.

 

மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நாவல் பழம்:

 

நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. அதனால் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும்  உடலில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை தடையில்லாமல் செல்லவும் நன்கு உதவி புரிகிறது.


சர்க்கரை நோயாளிக்கு ஒரு சிறந்த மருந்து:

நாவல் பழத்தில் உள்ள கிளைசெமிக் பண்புகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும், நாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தாலும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. அதே சமயம் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

உடல் எடையை குறைக்கும் நாவல் பழம்:

 

 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நாவல் பழம் சிறந்தது. குறைந்த கலோரிகளே உள்ளன.  நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. கொழுப்பை குறைத்து, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

 

சருமம் பொலிவு பெற நாவல் பழம்:

 

இந்த பழத்தில் சரும ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் சி உள்ளது. சூரிய கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சருமத்தில் தோல் இறுகுவது தவிர்க்கப்பட்டு இளமையான தோற்றத்தைத் தருகிறது.

 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்:


நமக்கு நாவல் பழம் பல நன்மைகளை அளித்தாலும் அளவாக பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கலாம். நாவல் பழத்துடன் சிறிதளவு உப்புச்சேர்த்து சாப்பிடுவது நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.


மேலும்இது போன்ற  தகவலை காண,



















Post a Comment

0 Comments