சர்க்கரை நோய்(diabetes) என்றால் என்ன? எதனால் இது வருகிறது? இது என்ன செய்யும் நம்ம உடலை? இதோ முழு விவரத்துடன்??



இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வரம்புக்கு மீறி  இருக்கும் நிலையே சர்க்கரை நோய் (diabetes) எனப்படும். இது ஒரு வளர்ச்சிதை மாற்ற சீர்குலைவுகளில் (metabolic syndrome) தொகுப்பாகும்.

நமது உடலில் உள்ள கணையம் pancreas எனும் சுரப்பி சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன், நமது இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை முறைப்படுத்தும் பணியைச் செய்கிறது. தேவையான அளவு இன்சுலின் சுரக்காத அல்லது சுரக்கும் இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ளவர்களின் இரத்தத்தில் இந்த குளுகோஸின் அளவு வரம்பு மீறி இருக்கும்.

இந்த நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான நிலைமைகளை உருவாக்கலாம். இதய நாள, கண் கோளாறுகள், ஆறாத புண்கள், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரக கோளாறுகள், உயர் தாகம், சோர்வு, பக்கவாதம் போன்ற பல்வேறு  நோய்களுக்கு சர்க்கரை நோய் காரணியாக அமையும்.

 

சர்க்கரை நோய் இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை

 

type 1 diabetes:

இளஞ்சிறார் சர்க்கரை நோய்  என்னும் இவ்வகையில், கணையத்துள்ள இன்சுலின் சுரக்கும் சுரப்பிகள் சிதைவடைவதால், ஒட்டு மொத்த இன்சுலின் சுரத்தலும் தடைப்படும். பொதுவாக இளம் பிராயத்தினரிடமே இவ்வகைக் குறைபாடு காணப்படும். இவர்களுக்குத் தேவைப்படும் இன்சுலின் புற ஆதாரங்களில் இருந்து அளிக்கப்படும்.

 

type 2 diabetes:

கணையம் போதிய இன்சுலினை ச் சுரக்காமலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் பலன் தரும் வகையில் பயனாகாத நிலையிலோ இருப்பது. மாத்திரைகள், உடற்பயிற்சி, உணவுமுறை மாற்றம் போன்ற வழிகளில் இக்குறைப்பாட்டை எதிர்கொள்ளலாம்.


மேலும்இது போன்ற  தகவலை காண,
















Post a Comment

0 Comments