மொபைல் போன், டிவி போன்ற மின்சாதனங்களின் சுவிட்சை ஆப் செய்யவில்லை என்றால்? கரண்ட் பில் அதிகமாக உயருமா?


நம்மில் பலர் இதனை கண்டிபாக செய்து இருப்போம், உங்கள் மொபைல் போன்களில் சார்ஜ் ஏறியவுடன் சுவிட்சை ஆப் செய்யாமல்,  மொபைலை அப்படியே சார்ஜரில் இருந்து பிடுங்கி கொண்டு செல்வதை பார்த்து இருப்போம். அப்படு  டிவி , ஏசி போன்ற மின்சாதனங்களை பயன்படுத்திய பின்னர் ரிமோட்டில் ஆப் செய்துவிட்டு சுவிட்சை ஆப் செய்யாமல் சென்றால் கரண்ட் பில் அதிமாகி உயர்ந்து விடுமா என்ற கேள்விகான பதிலை இங்கு பார்க்க போகிறோம்.

ஆனால், உண்மை என்னவென்றால், இவைகளை நாம் இப்படியே பயன்படுத்தி வந்து இருந்தால்,  சிறிது சிறிதாக மின்சாரத்தை இழுத்து உங்கள்  வீட்டின் கரண்ட் பில்லை ஆண்டுக்கு 1000 ரூபாய் வரை அதிகரிக்க செய்யும் என்றால் நம்ப முடிகிறதா உங்களால், ஆனால் இது நிஜம்.

மின்னணு சாதனங்களை ரிமோட் மூலம் இயக்கும் போது அதை பயன் படுத்திய பிறகு, சுவிட்சை அணைப்பதில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டிவி,  சார்ஜர் மற்றும் ஏசி ஆகிய மின்னணு சாதனங்களை பயன் படுத்திய பிறகு ஸ்விட்சை அணைக்காமல் விட்டால், தொடர்ந்து மின்சாரத்தை இழுக்கும் என கண்டு அறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி,  டிவி, செட்டாப் பாக்ஸ், ஏசி, சவுண்ட் சிஸ்டம் ஆகிய மின் சாதனங்கள் அனைத்து வீடுகளில் இருக்கும் என்பதால் 4 சாதனங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வில் 70 % மக்கள் 4 மின் சாதனங்களின் சுவிட்ச்களை அணைப்பதில்லை என்றும்,  Standby நிலையிலேயே வைத்திருப்பதாகவும் கூறி உள்ளனர்.

இப்படி, ஸ்விட்சை அணைக்காமல் வைத்திருந்தால் தேவையில்லாமல் 174 யூனிட் மின்சாரம் வரை கூடுதலாக செலவாகும் என்றும் அதற்கு சுமார் ஆயிரம் ரூபார்ய் வரை கட்டணமாக செலுத்தவேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த 174 யூனிட் மின்சாரம் என்பது ஒரு 10 வாட் LED லைட்டை 1 ஆண்டு முழுவதும் எரிய விடுவதற்கு சம்மாகும். இனிமேல்,  டிவி, செட்டாப் பாக்ஸ், ஏசி, சவுண்ட் சிஸ்டம், சார்ஜர் உள்ளிட்ட மின்சார உபகரணங்களை பயன்படுத்திய பின்னர் சுவிட்சை அணைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இல்லையெனில் மின்சாரத்திற்காக அதிக தொகையை கட்ட நேரிடும் வாய்ப்புகள் இருக்கிறது உள்ளது.

 இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

வாழைப்பழங்கள் ஏன்? வளைந்து காணப்படுகிறது? ஏன் நேராக இல்லை என்று தெரியுமா?

















Post a Comment

0 Comments