நம்மில்
பலர் இப்போ எல்லாம் பழங்களை சாப்பிடவே நேரம் இல்லமால் போயிவிடுகிறது. கிடைக்கும் பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் அது ஆரோகியமானதா என்பதை
கூட நாம் பார்ப்பதில்லை அந்த
அளவிற்கு பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம்.
பழங்கள்
என்றலே அதில் சத்துகள் தான் அதிகமாக உள்ளது.
குறிப்பாக பழத்தை வாங்கிய உடன் சாப்பிடும் போது
அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும் என்று நம்மில் பலர் எண்ணுகிறார்கள்.
குறிப்பாக,
விலைக்குறைவாகவும் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை வேண்டாம் என்று கூறுபவர்களே இல்லை . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும்
வாழைப்பழத்தில் என்னனென்ன
சத்துகள் இருக்கிறது தெரியுமா? வைட்டமின், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் என, மனித உடலுக்கு
அத்தியாவசியமாக தேவைப்படும் சத்துக்கள் உள்ளது.
அந்த
வகையில் பல கடைகளில் கிடைக்கக்கூடிய
வாழைப்பழங்களை அப்படியே நம்மில்
பலரும் வாங்கிவிடுகின்றனர். இயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களில் மட்டுமே முழுமையான சத்துக்கள் உள்ளன. ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களே பெரும்பாலும் கடைகளில் கிடைக்கின்றன. அப்போது சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை, உடலுக்கும் பாதிப்பு மட்டுமே உண்டாகிறது.
வாழைப்பழம்
இயற்கையாக பழுத்ததா அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என எப்படி அறிவது
தெரியுமா? இதோ நீங்களே பாருங்கள்?
இயற்கையாக
பழுத்த வாழைப்பழத்தில் பிரவுன் நிற புள்ளிகள் இருப்பதை
பார்க்க முடியும். ரசாயனத்தை கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள், முழு மஞ்சள் நிறத்துடன்
இருக்கும்.
வாழைப்பழத்தின் காம்பும் பழம் அளவுக்கு மஞ்சள் நிறத்துக்கு மாறும். பழத்துக்கே உரிய மணம் இருக்காது; சுவையும் குறைவாக இருக்கும். வாழைப்பழங்களை பார்த்தாலே இந்த வித்தியாசம் தெரியும்.
இனி வாழைப்பழம் வாங்கும் போது பழங்களை சற்று
கவனித்து வாங்குங்கள். அப்போதான் நமது ஆரோகியத்தின் மேல்
கவனம் செலுத்த முடியும்.
0 Comments