இரவு நேரத்தில் கண்டிப்பாக இந்த உணவிகளை நீங்க தவிர்க்க வேண்டும்!! இதோ லிஸ்ட்!!



மருந்தே உணவு என்ற நிலை மாறிவிட்டது. உணவுக்கு பின் உணவுக்கு முன் என்று மருந்துகள் சாப்பிடும் நிலை உருவாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு புதிய உணவு முறையை பின்பற்றுவதினால் தான் இன்று பல நோய்களுக்கு நாம் சொந்தமாகிறோம்.

இப்போது எல்லாம் யார் கேட்டாலும் சுகர், பிபி என்று சொல்கிறார்கள். அந்த் அளவிற்கு உணவில் நாம் கவனமாக இல்லை என்று தெரிய வருகிறது. அப்படி நாம் இரவில் எடுத்து கொள்ளும் உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

சில உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. அதில் இரவில் சாப்பிட கூடாத உணவுகள் இருக்கிறது. அப்படி சாப்பிட்டால் செரிமானம், உடலின் வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சுரப்பு, ரத்த ஓட்டம், உடல் எடை, நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். அதனால் சில உணவு வகைகளை, இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குறிப்பாக கொழுப்பு உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், சீஸ் மற்றும் துரித உணவுகளை இரவு நேரத்தில் உட்கொள்வதைத் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவை சரியாக செரிக்காமல் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கும்.

மேலும், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் காபின், கார்பனேட்டட் பானங்கள், காபி, டீ போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உடலின் ஹார்மோன் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால், தூக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் எடை போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படும்.

மேலும், உடலுக்கு நன்மை தரும் நீர்ச்சத்துள்ள உணவுகள் வெள்ளரி, தக்காளி, செலரி, கேரட், சவ்சவ், புடலங்காய், ஆரஞ்சு, திராட்சை மற்றும் பூசணி வகை பழங்களையும் இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

இவற்றில் உள்ள நீர்ச்சத்து காரணமாக, சிறுநீர்ப்பை எளிதில் நிறைந்து தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலையை உண்டாக்கும். மேலும், இவை உள் உறுப்புகளின் இயக்கம் மற்றும் உடலில் உள்ள செல்களை புத்துணர்வாக்குவதால், இரவு நேரத்தில் தன்னிச்சையாக ஏற்படும் தூக்கத்துக்கான சுழற்சியில் தடை ஏற்படும்.

மேலும், கார உணவு வகைகள்,  இரவு நேரங்களில் அதிகமாக காரம் உள்ள உணவுகள், பாஸ்ட் புட் வகைகள், ரெடிமேட் உணவுகள் மற்றும் பச்சை மிளகாயை பாதி வெந்த நிலையில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

கார உணவுகளில் உள்ளகாப்சைசின்என்ற கலவை செரிமான பிரச்சினைகளை உண்டாக்குவதுடன், நெஞ்செரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

பழங்கள் வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி வகை பழங்கள், நெல்லிக்காய், செர்ரி பழங்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இதனால் சீரற்ற தூக்கம், செரிமான பிரச்சினை மற்றும் சளிக்கு வழிவகுக்கும்.  இதனால் உடலுக்கு நன்மை கொடுத்தாலும் இவைகளை தவிர்ப்பது நமக்கு நன்மையை விளைவிக்கும்.


மேலும்இது போன்ற  தகவலை காண,























Post a Comment

0 Comments