குழந்தை போல் ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சி தகவல் இதோ!!


இப்போது எல்லாம் பெற்ற குழந்தை கூட தன் பக்கத்தில் வைத்து கொண்டு தூங்கிவதில்லை ஆனால் அனைவருமே தங்களின் ஸ்மார்ட்போன்களை கொண்டு தான் தூங்கிகிறார்கள்.அதுவும் போன் சார்ஜ் ஏறும் நேரத்தை விட்டு மற்ற நேரங்களில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டார்கள்.

 அதுமட்டுமில்லமால் கைக்கு எட்டும் தூரத்திலியே, செல்போன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அப்படி ஸ்மார்ட்போனை அருகிலேயே வைத்து கொண்டால், நமது உடலுக்கு என்னவெல்லாம் ஆபத்துகள் ஏற்படும் என்பது தெரியுமா?

பொதுவாக ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும்  பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைப்பது ஒரு பழக்கம். ஆனால் இது எவ்வளவு ஆபத்தான ஒரு பழக்கம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

குறிப்பகா செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  இப்படி செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கிறார்கள்.

செல்போன்களை முடிந்தளவு, ப்ளூடூத் ஹெட் செட்டை பயன்படுத்தவும். ஏதாவது தர விறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளி இருப்பது நல்லது. உங்கள் செல்போனை எப்பொழுதும் கைப்பை மற்றும் தோள் பைகளில் வைக்க பழகுங்கள்.

இரவில் தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ , தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இந்த பழக்கம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதே சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் மனித மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. குறைந்தது, 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும்.

மேலும், இரவு நேரத்தில் உறங்கும், முன் முழு இருளில் செல்போன் பார்ப்பதால் செல்போனில், இருந்து வரக்கூடிய வெளிச்சம் கண்களில் இருக்கக்கூடிய நுண்ணிய,  நரம்புகளை தளர்வடைய செய்து பாதிப்படைய செய்கிறது.

செல்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கும் போது அதில் இருந்து வெளிவிடும் கதிரியக்கம் உடலில் மெலடோனின் ஹார்மோனில், பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஹார்மோன்தான் நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும் என்று ஆய்வில் செய்துள்ளது.


மேலும்இது போன்ற  தகவலை காண,



























Post a Comment

0 Comments