மாதுளை
என்ற பெயரே கேட்டதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது அதன் நிறம் தான்
அனைவருக்கு பிடித்த பழம் என்றால் அதில்
மாதுளையும் ஒன்றாகும். பல சத்துக்களை உள்ளடக்கிய
இந்த பழத்தின் பல அற்புதங்கள் நிறைந்துள்ளது.
குறிப்பாக
பழம் மட்டும் அல்லமால் அதன் தோலில் இவ்வளவு
நன்மைகளாக என்று ஆச்சிரியம் அடைய செய்கிறது. என்னவென்று
தெரிந்தால் இனிமேல் நீங்கள் தோலை விட்டு வைக்க
மாட்டீர்கள்! எடுத்து பத்திரம் தான் செய்வீர்கள்.
பெண்களுக்கு
முக்கிய பங்கு அளிகிறது இதன் தோல், குறிப்பாக
பெண்களின் முகப்பரு சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சணைகளுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது. இதன் தோலை வெயிலில்
நன்றாக காயவைத்து மிக்சியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப்பொடியுடன்
சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் மாஸ்க் ஆக அணிந்து கொள்ளலாம்.
பொதுவாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சருமத்தில் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சுருக்கங்கள் வரவிடாமல் தவிர்க்கிறது. சருமத்துக்கு இளமைத்தோற்றம் கிடைப்பதுடன் பளபளப்பு அதிகரிக்கிறது. பிக்மண்டேஷன்
பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கிறது.
மருத்துவ பயன்கள்:
அழகு
சார்ந்த பிரச்சணைகளுக்கும் மட்டும் தீர்வு அளிப்பது மட்டும் இல்லமால் பற்களின் ஈறுகளுக்கு மிக ஆச சிறந்த
மருந்தாக செயல்படுகிறது. தோலுடன் சிறிது
உப்பு சேர்த்து பல் துலக்கினால், ஈறுகள்
வலுவடைவதுடன், பற்கள் பளிச்சிடுகிறது.
மதுளை
தோல் இதயம் சார்ந்த பிரச்சணைகள், நீரிழவி போன்ற பாதுப்புகளுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
மாதுளையின் சாற்றை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்
போன்ற பாதுப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
0 Comments