செம்பருத்தி பூ பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் இதோ!!


செம்பருத்தி பூவின் அறிவியல் பெயர் (Hibiscus rosa-sinensis). செம்பருத்தின் தாயகம் கிழக்கு ஆசியா. இவை இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் அதிக அளவில் வளர கூடியவை.  இந்த மலரை சீன மலர் என்றும் கூறப்படுகிறது. இந்த மலர் மலேசியாவின் தேசிய மலராகும். இந்த மலர் பார்பதற்கு அழகாக இருப்பதினால் இவை அழகுக்கான மலராகவே அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் செம்பருத்தி மலர் பல நன்மைகளை கொண்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிக அளவில் பயன்களை தர கூடியவை.

இந்த மலரின் இதழ்களை பெண்களின் கூந்தலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. முகம் பொலிவிற்கும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், செம்பருத்தி பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. அழகுக்கு மட்டும் அல்லமால் மருத்துவ குணத்தையும் இந்த மலர் கொண்டு உள்ளது. பலர் கடவுளை வழிப்படவும் இந்த மலரை உபயோகித்து வருகிறார்கள்.

இந்நிலையில், செம்பருத்தி பூ தற்போது சிகப்பு வண்ணம் மட்டுமின்றி பல வண்ணங்களில் கிடைக்கிறது. அதற்கு காரணம் பூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும்.

 மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!












Post a Comment

0 Comments