தூக்கம்
அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும் ஆனால் இன்றை சூழ்நிலையில் 8 மணி நேரம் தூக்கம்
என்பது அனைவருக்கும் கனவாக இருக்கிறது. அதற்கு காரணம் மனிதர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். அன்றாட வேலைகளில் மாற்றங்களும் இதற்கு காரணமாகும்.
குறிப்பாக
நம்முடைய பழக்க வழங்களை மாற்றினாலே நமக்கு தேவை தூக்கம் கிடைக்கும்.
அப்படி என்ன பழக்க வழக்கம்
என்று தானே கேள்வி கேட்டு
கொண்டு இருக்கிறீர்கள். இதோ !!
- இரவில் தூங்க செல்வதற்கு முன்பே டீ மற்றும் காபியை தவிர்க்கவும் பால் குடிப்பதே ஆக சிறந்தது.
- நமது படுக்கையறை சூழலை எப்போதும் உறங்குவதற்கு ஏதுவாக அமைக்க வேண்டும்.
- தினமும் அலாரம் வைக்கமால் தூங்கும் விழிக்கும் நேரம், தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கி காலையிலும் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள். அதனை கடைப்பிடிக்கும்போது எழுந்திருக்க வேண்டிய நேரத்தை உடல் அறிய உதவும்.
- படுக்கையறை ஒரு நல்ல சூழலை உருவாக்கி உறங்குவதற்கு ஏதுவாக அமைக்க வேண்டும். அது குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், சத்தமில்லாமலும் அமைந்திருக்க வேண்டும்.
- பொதுவாக காபி, டீயில் கலந்திருக்கும் காபின் விழிப்புடன் வைத்திருக்கும் தன்மை கொண்டது. எனவே, தூங்க செல்வதற்கு முன்பு டீ மற்றும் காபியை தவிர்க்கவும்.
- தூங்குவதற்கு முன்பு எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் தூக்க செல்வதற்கு 2 மணி நேரம் முன்பே இரவு உணவு உண்ண வேண்டும்.
- நீல நிற ஒளியை தவிர்க்கவும் ஸ்மார்ட்போன், டி.வி. லேப்டாப் போன்ற எந்த வகையான மின்னணு சாதனங்களையும் தூங்குவதற்கு முன்பு பார்க்கக்கூடாது. இந்த சாதனங்கள் அனைத்தும் நீல ஒளியை வெளியிடுகின்றன.
- இவ்வறை எல்லாம் சரியாக கடை பிடித்தால் போதும் உங்களின் தூக்கமின்மை பிரச்சணை குணம் அடைந்து விடும். ஒரு மனிதனுக்கு தனது வாழ்க்கையில் மிக முக்கியமானது தூக்கம் தான். இதை முறையாக செய்தாலே பாதி நோய்களில் இருந்து குணம் அடைந்துவிடலாம்.
- இனிமேல், அனைவரும் எட்டு மணி நேரம் தூக்கம் என்பது இன்றி அமையாதாக இருக்க வேண்டும்.!
மேலும், இது போன்ற தகவலை காண,
0 Comments